நகைச்சுவை நடிகர் யோகி பாபு ஒரு நாளுக்கு இவ்ளோ சம்பளம் வாங்குகிறாரா..! அதிர்ச்சியில் திரையுலகினர்

பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் தன்னை முன்நிறுத்திக் கொண்ட யோகி பாபு தற்போது தமிழ் திரையுலகில் தற்போது உள்ள முன்னணி காமெடி நடிகர்களில் மிகவும் பிரபலமாக விளங்கி வருபவர் நடிகர் யோகி பாபு. ஆம் நடிகர் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இதுமட்டுமல்லாமல் சோலோ ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து நம்மை மகிழ வைத்து வருகிறார் நடிகர் யோகி பாபு. கோலாமாவு கோகிலா படத்தில் அவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மீது காதல் வயப்பட்டத்தை அனைவரும் பார்த்து ரசித்தனர். இவரது கால்ஷீட் கிடைக்க வேண்டும் என்று பல இயக்குனர்கள் காத்துக் கொண்டிருக்கும் அளவுக்கு இவர் புகழ் உயர்ந்து உள்ளது.

இவர் தற்போது கர்ணன், டிக்கிலோனா, பிஸ்தா உள்ளிட்ட படங்களில் நடித்து வந்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில் நடிகர் யோகி பாபு ஒரு படத்திற்கு ஒரு நாளில் மட்டும் வாங்கும் சம்பளம் மட்டும் ரு.10 லட்சம் முதல் ரு.15 லட்சம் வரை என்று தெரிவிக்கின்றனர். மேலும் ஒரு படத்திற்கு முழுமையாக சுமார் ரு.1 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம் காமெடி நடிகர் யோகி பாபு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *