பிக்பாஸ் பிரபலம் ஒருவர் தேசிய பெண்கள் கட்சியின் தமிழக தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. சமீபத்தில் மருத்துவர் ஸ்வேதா ஷெட்டி என்பவரால் ‘தேசிய பெண்கள் கட்சி’ என்கிற பெயரில் புதிதாக ஒரு கட்சி தொடங்கப்பட்டது.

இக்கட்சி நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தியுள்ளது.
இதனிடையே தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் -2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நித்யா என்பவர் தேசிய பெண்கள் கட்சியின் தமிழக தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நித்யா, அதே பிக்பாஸ் பிரபலமும், நகைச்சுவை நடிகருமான பாலாஜியின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கட்சி பெண்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படும் என்றும் கட்சியினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை, நித்தியாவுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.