நகைச்சுவை நடிகர் சூரி பிறந்தநாளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மகள்! வேடிக்கையாக மகன் செய்த சர்ப்ரைஸ்

வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் சூரி. நகைச்சுவையில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகராகவும் வலம் வருகிறார். விரைவில் வெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாகவும் நடிக்க இருக்கிறார். நடிகர் சூரி தற்போது வடிவேலு, சந்தானத்திற்கு பிறகு தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நடிகர் சூரி நேற்று (27) தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

இந்நிலையில் இன்று பிறந்தநாள் காணும் நடிகர் சூரிக்கு திரைபிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நம்ம வீட்டுப் பிள்ளை பட இயக்குநர் பாண்டிராஜ் சூரியுடன் ட்ராக்டரில் செல்லும் வீடியோவைப் பதிவிட்டு வாழ்த்துகள் கூறியுள்ளார். அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன் சீமராஜா பட கெட்டப்பில் சூரியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் சூரியின் பிறந்தநாளை அவரது மகன் மற்றும் மகள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். கேக் செலவு – 1500, பெட்ரோல் கேக் – 500, டெக்கரேஷன் செலவு – 2000 மொத்தம் 4000 என்றும் மொத்த காச எடுத்து வெச்சிட்டு கேக்க வெட்டு என்று அந்த கேக்கின் மேல் வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளனர். தனது பிள்ளைகளின் இந்த குறும்பு தனமான செயலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவு ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்து வருகின்றது.

 

Leave a Reply

Your email address will not be published.