தமிழ் சினிமாவில் ஜீவா நடித்த டிஷ்யூம் படத்தில் நடித்து பிரபலமானவர் காமெடி நடிகர் கின்னஸ் பக்ருவின். அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் காவலன், சூர்யா நடித்த ஏழாம் அறிவு மற்றும் அற்புத தீவு, அறியான் போன்ற பல வெற்றி திரைபடங்களில் காமெடி நடிகராக நடித்தவர் கின்னஸ் பக்ரு. இவரது பெயர் உண்ட பக்ரு. இவர் 1986ஆம் ஆண்டு வெளிவந்த அம்பிலி அம்மாவன் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கின்னஸ் சாதனையாளரானார். அதனைத் தொடர்ந்து அவர் கின்னஸ் பக்ரு என பிரபலமடைந்தார்.

தமிழ் மற்றும் மலையாளத்தில் பல படங்களிலும் நடித்தவர் கின்னஸ் பக்ரு. இவர் குட்டீம் கோலும் என்ற மலையாள படத்தை இயக்கவும் செய்துள்ளார். தொலைக்காட்சியில் பல சீரியல்களிலும், காமெடி ஷோக்களிலும் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கின்னஸ் பக்ருவின் மனைவி காயத்ரி மோகன். இவரது மக்கள் தீப்தா கீர்த்தி. இவருக்கு முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்து இரண்டு வாரங்களிலேயே உயிரிழந்து விட்டது.
இந்நிலையில் காமெடி நடிகர் கின்னஸ் பக்ருவின் அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. அதனை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் லைக்குகளை குவித்து வருகின்றனர். இவ்வளவு பெரிய அழகிய மகள் இருக்கின்றாரா என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
#GuinnessPakru Family pic.twitter.com/EVSrPQSDNx
— Neruppu news (@neruppunews) August 23, 2020