இணையத்தில் சிறுமி ஒருவர் நடனமாடும் காட்சி வைரலாகி வருகிறது. அந்த வீடியோ பதிவில், சிறுமி ஒருவர் லட்சுமி பட பாடலுக்கு நடனமாடும் சிறுமியை பார்த்து அதேபோல் தானும் நடனமாட முயற்சி செய்கிறார். சிறுமியின் இந்த அழகான நடனம் மற்றும் சேட்டையை வீட்டில் இருந்த ஒருவர் படமாக்கிக்கொண்டிருக்கிறார் இந்த நிலையில், தொலைக்காட்சியில் வரும் அந்த பாட்டில் வரும் சிறுமி பேருந்தின் கைபிடிக்கம்பியை பிடித்து தொங்கியவாறு நடனமாடுகிறார். இதனை பார்த்த இந்த சிறுமி, அந்த சிறுமியை போன்றே செய்யவேண்டும் என்பதற்காக தொலைக்காட்சியை தாவிப்பிடித்து அதில் தொங்கியவாறு நடனமாட முற்சிக்கிறார். அப்போது டிவியுடன் சேர்ந்து சிறுமியும் கீழே விழும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
It only takes a few seconds… pic.twitter.com/90F0D9SHDk
— Kaveri 🇮🇳 (@ikaveri) December 22, 2020