கலகலப்பான பேச்சால் தனக்கென ரசிகர்களைப் பெற்றவர் தொகுப்பாளினி டிடி. விஜய் டிவியில் பல தொகுப்பாளர்கள் இருந்தாலும், ரசிகர்களுக்கு எப்போதுமே ஸ்பெஷல் என்றால் அது ‘டிடி’ தான். மேலும் ஒரு தொகுப்பாளினியியாக இவர் 20 வருடங்களாக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் ஒரு நடிகையாகவும் தற்போது சில படங்களில் நடித்து வந்தார்.
இவர் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதில் எப்போதும் சிக்ஸர் அடிப்பார். அடுத்து அவர் எந்த நிகழ்ச்சியில் வரப்போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக தான் இருக்கிறார்கள். பிரபல தொகுப்பாளினி டிடி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் டிடி அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட மேக்கப் இல்லாத புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. ஆனால் இது இப்போது எடுத்த புகைப்படம் இல்லை, எப்போதோ எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள டிடி எப்போதும் உங்கள் வீட்டு பொண்ணு என்று குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்து சிலர் கேலி செய்து வந்தாலும் ஒரு சிலர் நீங்கள் மேக்கப் இல்லாமலும் அழகு தான் என்று புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.