பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் ஈழத்து பெண் லாஸ்லியா. இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் தமிழ் சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தற்போது தமிழ் சினிமாவின் இளம் நடிகையாகி விட்டார் லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் ஆரியுடன் ஒரு படத்தில் கமிட் ஆனார்.

அந்த படத்தை தொடர்ந்து, லொஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங்க், ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணைந்து நடிக்கும் படம் ஃப்ரெண்ஷிப். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட 60% சதவீதம் முடிந்து விட்ட நிலையில் மேலும் ஒரு பட வாய்ப்பு இவரை வந்தடைந்தது. ஆம் நடிகை லாஸ்லியா இதுவரை மூன்று படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். பிக் பாஸ் புகழ் லாஸ்லியா இப்போது ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருக்கிறார் என்று கூறலாம்.
லாஸ்லியா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். சமீப நாட்களாக வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவருக்கு ரசிகர்களின் பட்டாளம் மிக மிக ஏராளம் என்றே கூறலாம். இந்நிலையில் வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து அசத்தலாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
. #Losliya pic.twitter.com/qJitWje9ZY
— Losliya Mariyanesan ▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️ᴾᵃʳᵒᵈʸ (@Losliyamaria96) September 23, 2020