தேவதைப் போல் ஜொலிக்கும் செந்தில்-ராஜலட்சுமி! புகைப்படம் இதோ.. இப்படி இவரை மாற்றியது யார் தெரியுமா?

செந்தில்-ராஜலட்சுமி தனது எளிமையான குரலில் கிராமத்து பாடல்களை பாடி அசத்தி புகழின் உச்சத்திற்கு சென்றுள்ளனர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல கலைஞர்களை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது. அந்த வகையில் பிரபலமானவர்கள் தான் செந்தில்-ராஜலட்சுமி. சமீபத்தில் ராஜலட்சுமி பயங்கர மேக்கப்பில் மாறிய புகைப்படம் ஒன்றினை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இதுகுறித்து ராஜலட்சுமி கூறுகையில், எனக்கு மேக்கப் போட்டு விட்டது என்னுடைய சொந்தக்கார பெண் ராதிகா தான். திண்டுக்கல்லில் இருக்கும் உங்க அம்மா வீட்டிற்கு வரும்போது உங்களுக்கு நான் மேக்கப் போட்டு விடுகிறேன் என்று சொன்னார்கள். சமீபத்தில் என் அம்மா வீட்டிற்கு நான் சென்ற போது அவர்களுக்கு சரி என்று கூறினேன். மேலும் மேக்கப் போடுவது என்றால் எப்போதும் எனக்கு பயம்.

மேலும் அவ்வளவாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது நான் அணியும் ஆடைகளில் கூட நான் போட்டோ எடுப்பது கிடையாது.  மேலும் சிம்பிளாக மேக்கப் போட வேண்டும் என்னுடைய முகம் மற்றும் ஹேர் ஸ்டைல் மாறக்கூடாது என்று கூறினேன்.  என் கணவருக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைத்த போது அடேயப்பா எப்ப நடந்துச்சு… என்று ஆச்சரியத்துடன் பேசி சிரித்தார் என்று கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published.