சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட செளந்தர்யா தனது தேனிலவு புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யாவுக்கும், விசாகன் என்பவருக்கும் கடந்த 11-ஆம் திகதி கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நடிகர், நடிகைகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு தம்பதியை வாழ்த்தினார்கள்.இந்நிலையில் திருமணம் முடிந்து ஐஸ்லாந்துக்கு செளந்தர்யாவும், விசாகனும் தேனிலவு சென்றுள்ளனர்.
இது குறித்த புகைப்படங்களை செளந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் ஐஸ்லாந்தில் தேனிலவில் உள்ளேன், என் மகன் வேத் கிருஷ்ணாவை மிஸ் செய்கிறேன் என பதிவிட்டுள்ளார். செளந்தர்யாவின் டுவிட்டர் பதிவு வைரலாக பரவி வருகிறது.
#Iceland #Honeymoon #Freezing #LovingIt #LivingLife #GodsAreWithUs #MissingVed ❤️❤️❤️❤️❤️❤️ pic.twitter.com/lysBJn67BM
— soundarya rajnikanth (@soundaryaarajni) February 15, 2019