சீனாவில் நம்மளை அதிரவைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.. இரண்டு மணி நேர இடைவெளியில் எட்டு நாய்களை திருடியதாக சீன உணவக உரிமையாளரை பொலிசார் கைது செய்துள்ளனர். சென் என்ற அறியப்பட்ட சந்தேக நபர், விஷ ஊசிகளால் நாய்களை சுட்டுக் கொன்றது தெரியவந்துள்ளது. டிசம்பர் 15ம் திகதி காலையில், ஜாங்ஜியாகாங்கில் உள்ள ஃபெஙுவாங் என்ற நகரத்தைச் சுற்றி இரு சக்கர வாகனத்தில் சவாரி செய்த சென், நாய்கள் மீது விஷ அம்புகளால் சூடு வதைக் கண்டு உள்ளுர்வாசிகள் பொலிஸை அழைத்துள்ளனர் என்று உள்ளுர் ஊடகம் தெரிவித்துள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், சந்தேக நபரை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். சிசிடிவி காட்சியில், விஷ அம்பால் சூடப்பட்டு தரையில் போராடிக்கொண்டிருந்த நாயை சென் தனது பைக்கில் வைத்து எடுத்துச் செல்வதைக் காட்டுகிறது. கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாண பொலிசார் கூறுகையில், நாட்டில் குளிர்காலத்தில் நாய் இறைச்சி விலை அதிகம் என்பதால் குற்றவாளி திருடியுள்ளார், மக்கள் நாய் உணவுகளை சாப்பிடுவதற்கான உச்ச காலம் இது.
நாய் இறைச்சி உணவுக்காக மற்ற உணவகங்களில் மக்கள் கூட்டமாக செல்வதை கண்ட சென், அதை தானும் விற்க விரும்பியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், நாய் இறைச்சிக்கான விலை ‘மிகவும் அதிகமாக’ இருப்பதால் அவர் தெரு நாய்களை திருடியுள்ளார். அதற்காக இணையத்தில் வில் மற்றும் பல விஷ அம்புகளை வாங்கி இச்செயலில் ஈடுபட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.