சின்னஞ்சிறு குழந்தைகள் எதை செய்தாலும் பார்க்கவே மிகவும் ரசனையாக இருக்கும். அவர்கள் செய்யும் சேட்டைகளை பார்த்தாலே நமக்கு நேரம் செல்வதே தெரியாது. இப்போது ஒரு குழந்தை தூக்க மயக்கத்தில் செய்யும் ஒரு செயல் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. குறித்த அந்த வீடியோவில் எல்.கே.ஜி படிக்கும் சிறுவன், வகுப்பறையிலேயே தன்னை மறந்து தூங்கிவிட்டான். மாலையில் பள்ளிக்கூடம் விடும் நேரத்தில் ஸ்கூலுக்கு வந்த அவனது அம்மா மகனை எழுப்பிவிட்டு புத்தகத்தையும் எடுத்து பைக்குள் வைக்கிறார். இதனிடையே தூக்கத்தில் இருந்து முழித்த அந்த பொடியன் தன் ஸ்கூல் பேக் என நினைத்து குழந்தைகள் உட்காரும் குட்டிச்சேரைத் தோளில் தூக்கிப் போட்டு நடக்க ஆரம்பிக்கின்றான். குறித்த இந்தக் காட்சி இணையத்தில் செம தீயாக பரவிவருகிறது.
தூக்க மயக்கத்தில் இந்த குழந்தை செய்யும் செயலைப் பாருங்க! விழுந்து விழுந்து சிரிப்பீங்க..!
