தூக்கில் தொங்கிய அழகிய இளம் பெண்: நடந்ததை அதிர்ச்சி விலகாமல் விளக்கிய தந்தை

தமிழகத்தில் சக மாணவிகள் கிண்டல் செய்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகள் திவ்யா (21). தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு இளங்கலை படித்து வந்தார். திவ்யா கடந்தாண்டு மாநில அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் தங்கம் வென்றார். இந்நிலையில் கடந்த 2ஆம் திகதி சக வகுப்பு மாணவிகள், இந்தாண்டு சிலம்பு போட்டியில் எப்படி தங்கம் வெல்லப்போகிறாய் என திவ்யாவை கிண்டல் செய்த நிலையில் இது குறித்து அவர் தந்தையிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து கல்லூரி பேராசிரியையிடம் திவ்யாவின் தந்தை பழனிவேல் புகார் அளித்தார். ஆனாலும் மாணவிகள் மீண்டும் திவ்யாவை கிண்டலடித்ததால் மனமுடைந்த அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இது குறித்து பழனிவேல் கூறுகையில், நாங்கள் படிக்க தெரியாதவர்கள்,

எங்கள் குடும்பத்தில் முதலில் எழுத படிக்க கற்றுக்கொண்டது எங்களது மகள் தான். என் மகள் சிலம்பம் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதோடு, நடனம், பேச்சு போட்டி போன்றவற்றிலும் பரிசுகளை பெற்றுள்ளார். திறமையுள்ள எனது மகள் முன்னேறிவிடக்கூடாது

என சக மாணவிகள் அவரை ராகிங் செய்துள்ளனர். இது குறித்து பேராசிரியரிடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நான் என் மகளை இழந்துவிட்டேன் என வருத்தத்துடன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!