துளியும் மேக்கப் இல்லாமல் குக் வித் கோமாளி மணிமேகலை வெளியிட்ட புகைப்படம்! வாயடைத்துப்போன ரசிகர்கள்- குவியும் லைக்குகள்

தொகுப்பாளினியாக இருந்து தற்போது விஜய் டிவியில் ஒரு முக்கியமான நபராக இருப்பவர் மணிமேகலை. ஒரு பாடல் தொலைக்காட்சி மூலம் தொகுப்பாளினியாக தனது பணியை தொடங்கியவர் மணிமேகலை. பிரான்கா சொல்லட்டா, பிரிய விடு, கோலிவுட் டைரிஸ் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அந்த நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். அதில் பிரபலமான அவர் இடையில் டான்ஸ் கோரியோக்ராபர் ஹுசைன் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அந்த நேரத்தில் தொலைக்காட்சியை வேலையை நிறுத்திவிட்டு விஜய் டிவிக்கு வந்தார். இதில் மணிமேகலை சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார். விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான கலக்க போவது யாரு சீசன் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதன் பின்னர் ஹிட் ஷோவான குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

தற்போது குக் வித் கோமாளி 2 சீசனிலும் கலக்கி வருகிறார். குறிப்பாக இந்த ஷோவில் இவருக்கேன தனி ரசிகர்களே இருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டீவாக இருக்கும் அவர் மேக்கப் இல்லா தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் மேக்கப் இல்லாமலும் நன்றாக தான் இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அவரது மேக்கப் இல்லா புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *