துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட 19 வயது இளைஞன்! திருமணமான பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால் நேர்ந்த விபரீதம்?

இந்தியாவில் 19 வயது இளைஞன் திருமணமான பெண் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால், அவரின் தலை துண்டாக வெட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரபிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் இருக்கும் டிக்குவாபுடி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி கோவிந்தராஜலு-முனிச்சண்ட்ரம்மா. இந்த தம்பதிக்கு வம்சி என்ற 19 வயது மகன் உள்ளார். இவர் இந்த தம்பதிக்கு இரண்டாவது மகன் என்று கூறப்படுகிறது. JCB ஆப்ரேட்டராக வேலை செய்யும் வம்சி கடந்த வியாழக்கிழமை அருகிலிருக்கும் காட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், பெற்றோர் அவரை தேடியுள்ளனர்.

எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதன் பின் காட்டிலிருந்து ஒரு வித துர்நாற்றம் வீசியதால், அங்கிருக்கும் உள்ளூர்வாசிகள் என்ன என்று தேடிய போது, தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உடல் பாகங்கள் வெட்டப்பட்டு நபர் ஒருவரின் உடல் இருந்துள்ளது. அதன் அருகிலே செல்போன் ஒன்று இருந்தது. அது வம்சி பயன்படுத்தும் செல்போன் என்பதால் அவர் தான் கொலை செய்யப்பட்டுகிடக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் அவரின் தலையை தேடிய போது சுமார் 5 மணி நேர தேடலுக்கு பின் 40 மீற்றர் தொலைவில் கண்டு பிடித்தனர். இதையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ள பொலிசார் கொலை நடந்து இரண்டு நாட்கள் ஆகியிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வம்சி அந்த கிராமத்தில் இருக்கும் திருமணமான பெண் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அதன் காரணமாக கூட கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிசார் விசாரித்து வருவதாக அங்கிருக்கும் ஊடகங்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published.