துணை நடிகர் ஜெய்கணேஷ் என்ன ஆனார் தெரியுமா? வெளியான அவரை பற்றிய தகவல்கள்!!

தமிழ் சினிமாவின் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஜெய் கணேஷ். இயக்குனர் சிகரம் இயக்குனர் கே பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் அவள் ஒரு தொடர்கதை, ஆட்டுக்கார அலமேலு, தாயில்லாமல் நானில்லை, அதிசயப் பிறவி முதலிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகின்றார்.

நடிகர் ஜெய் கணேஷ் ஓர் பொறியாளர் ஆவார். முதன்மை, துணை, எதிர்மறை எனப் பலவாறான பாத்திரங்களில் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களிலும் மேடை நாடகங்களிலும் நடித்தவர். தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ஜெய் கணேஷ்.

சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, ஜெய்சங்கர், சிவகுமார், முத்துராமன், சுமித்ரா, ஸ்ரீவித்யா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், படாபட் ஜெயலக்சுமி, சத்யபிரியா, ஜெயமாலினி, அனுராதா, விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், ராதிகா, ரேவதி, விஜய், அஜீத் குமார் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். பின்னர் உடல் நலக்குறைவால் ஜெய்கணேஷ் பிப்ரவரி 11, 2001ல் தன் 54ம் அகவையில் பு ற் று நோ யா ல் இ ற ந் தார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *