தீ விரம் அடைந்த நிவர் புயல்..!! புதுச்சேரியில் மூன்று நாள் ஊரடங்கு – அரசு உத்தரவு!

நிவர் புயல் காரணமாக மூன்று நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகும் நிவர் புயல் நாளை நண்பகல் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரை கடக்கிறதுநிவர் புயல் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் அதிக பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இரு மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றன.

இந்நிலையில் இன்றிலிருந்து மூன்று நாள்கள் புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இன்று காலை 9 மணியிலிருந்து 26ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் பொது இடங்களில் ஒன்றுகூட கூடாது. பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

நாளை (நவம்பர் 25) பால், மருந்து, பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசிய விற்பனையைத் தவிர பிற கடைகள் அனைத்து மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சாலையில் நடக்க கூடாது, மரங்கள் இருக்கும் இடங்களுக்கு அருகில் செல்லக் கூடாது என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசும் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.