தீவிரவாதி தாக்குதலுக்கு முன்பு ராணுவ வீரர்களின் செல்ஃபி மற்றும் கடைசி நிமிடங்கள்.!! அனைவரையும் கண்கலங்க வைத்த காணொளி

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபோராவில் பயங்கராவாதிகள் நடத்திய தற்கொலைப்படை ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்த தீவிரவாதி நடத்திய கார் குண்டு தாக்குதலில் பேருந்து வெடித்துச் சிதறியதில் ஏராளமான பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். முதலில் 8 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு வெளியானது. பின்னர் 10, 12, 25 என அதிகரித்து தற்போது வரை 42 வீரர்கள் உயிரிழந்துள்ளனர் இந்த தாக்குதலுக்கு முன் நிதின் ராதோர் என்ற துணை ராணுவ வீரர் எடுத்த செல்ஃபியும் அவரது கடைசி தொலைபேசி அழைப்பும் மனதை நெகிழவைத்துள்ளது.

இந்த செல்ஃபி படத்தை நிதின் தமது சிஆர்பிஎப் சீருடையில் அவர் செல்லவிருந்த வாகனத்திற்கு முன்பு நின்று எடுத்துள்ளார். இவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் புல்தானா மாவட்டத்திலுள்ள சோர்பாங்கரா கிராமத்தை சேர்ந்தவர். 36 வயதான இவருக்கு சுஷ்மா என்ற மனைவியும், ஜே(Jay) என்ற 10 வயது மகனும் உள்ளனர். நிதின் ராதோர் 15 ஆண்டுகள் சிஆர்பிஎப் வீரராக பணிபுரிந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் ஜம்மு காஷ்மீருக்கு நிதின் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த பயங்கரவாத தாக்குதல் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் அவர் தனது மனைவியை தொலைபேசியில் அழைத்து காய்ச்சலால் அவதிபட்டிருக்கும் அவரது மகன் ஜே-வை விசாரித்திருக்கிறார்.  அவரின் கடைசி செல்ஃபியும், கடைசி அழைப்பும் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்த வசந்தகுமார் என்ற அந்த வீரரும் தாக்குதலில் பலியானவர்களில் ஒருவர். வசந்தகுமாருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்கு நடைபெற்றது. வசந்தகுமார் இறப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு தாயார் வசந்தாவுடன் செல்போனில் பேசி உள்ளார். அப்போது ஜம்முவில் மிகவும் குளிராக இருப்பதாக கூறி உள்ளார். தாயாருடன் பேசிய 2 மணி நேரத்தில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் வசந்தகுமார் பலியாகி இருப்பது அவரது குடும்பத்தினரை ஆறாத சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழந்த மற்றொரு வீரரான பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குல்விந்தர் சிங்கிற்கு கடந்த ஜனவரி மாதத்தில் தான் திருமணம் நிச்சியிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அவரது இறப்பு செய்தி அவரது குடும்பத்தை ஆழ்ந்த சோகத்தில் மூழ்கடித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் ரவுலி கிராமத்தைச் சேர்ந்தவர் குல்விந்தர் சிங். 28 வயதான இவருக்கும் லோதிப்பூர் கிராமத்தை சேர்ந்த பெண்ணிற்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அவர்கள் இருவருக்கும் இந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடக்கயிருந்தது.  குல்விந்தர் குடும்ப வறுமையின் காரணமாக படிப்பை தொடர முடியாமல் போனது. கடந்த 2014 ஆம் ஆண்டு சிஆர்பிஎஃப்பில் சேர்ந்தார்.

இவர் விடுப்பு முடிந்து ஊர் திரும்பும் முன் அவர் தந்தையிடம் பேசிய கடைசி உரையாடலை கேட்டால் அனைவருக்கும் கண்களில் கண்ணீர் ததும்பும். அவர் தனது தந்தையிடம், ‘நான் அக்டோபர் மாதம் நான் திரும்பிவந்துவிடுவேன் ஏனென்றால், நீங்கள் தனியாக திருமண வேலைகள் அனைத்தையும் செய்ய முடியாது. அதனால் நான் சீக்கிரம் வந்து உங்களுக்கு துணையாக இருப்பேன்’ என கூறியிருந்தார். இதைப்பற்றி மேலும் தகவல் பெற கீழேயுள்ள விடியோவை பாருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!