தீவிரவாதியால் மரணமடைந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு குவியும் நிதியுதவி! இதுவரை எவ்வளவு வந்துள்ளது தெரியுமா?

இந்தியாவில் தீவிரவாதி அமைப்பு நடத்திய தற்கொலை படை தாக்குதலில் இணையதளம் மூலம் நிதியுதவி குவிந்து வருகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா தாக்குதலில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் துணை இராணுவ வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினார். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெயிஷ்-இ-முகம்மது என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இப்படி ஒரு பயங்கரமான தாக்குதல் நடத்தியதால், உலகநாடுகள் பலவும் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளன.

அதுமட்டுமின்றி பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க இந்திய இராணுவம் தயாராகி வருகிறது. இந்நிலையில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு அந்தந்த மாநில அரசுகள் நிதியுதவி அளித்து வருகின்றன. இந்த தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் இருவரின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சமும், குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலையும் அளிப்பதாக

தமிழக அரசு அறிவித்தது.மேலும் வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விரும்புவோர் பாரத் கே வீர் என்ற இணையதளம் மூலம் நிதியுதவி அளிக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது.

இதையடுத்து கடந்த 3 நாட்களில் மட்டும் 18 கோடிக்கும் மேல் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைவான நேரத்தில் அதிக நிதியுதவி பெறப்பட்டது இதுவே முதல்முறை என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!