தீவிரவாதிகள் முகாம் மீதான இந்தியாவின் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது ஒரு தமிழரா? வெளியான உண்மை தகவல்

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமாப்படையினர் தாக்குதல் நடத்திய நிலையில் இதற்கு மூளையாக செயல்பட்டவர் தமிழர் என்ற செய்தி சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் உயிரிழந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் எல்லைக்குள்

நேற்று காலை புகுந்த இந்திய விமானப் படை அதிரடி தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஒரு தமிழர் என்றும், அவர் முதுகுளத்தூரை சேர்ந்தவர் என்றும் புகைப்படத்துடன் ஒரு செய்தி சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனிடையே தாக்குதலில் ஈடுபட்ட வீரர்களின் விவரங்கள்.

இந்திய விமானப்படை தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அது வீரர்களின் பாதுகாப்பு தொடர்பானது என்பதால் அந்த விவரங்கள் அறிவிக்கப்படுமா என்பது கேள்விக்குறியே.

இதனிடையே மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்துடன் “தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும்” என்ற வாக்கியத்துடன் பரவும் அந்த செய்தியில் உண்மை இல்லை என்று தெரியவந்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published.