நாம் அனைவரும் புற்றுநோயை பற்றி நன்கு கேள்விப்பட்டிருப்போம். அப்படிப்பட்ட நோய் உள்ளவர்கள் பிழைக்க மாட்டார்கள் என்றும் கேள்விப்பட்டிருப்போம். இங்கும் அது போலத்தான்.. தெற்கு லண்டன் பகுதியை சேர்ந்தவர் மிச்சாம். 17 வயதான இவருக்கு, அப்பென்டைசிடிஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகம் சமீபத்தில் ஏற்பட்டது. இதன்பேரில் மருத்துவ பரிசோதனை செய்த அவருக்கு பெரும் அதிர்ச்சி தகவல் கிடைத்தது. ஆம், Synovial Sarcoma எனும் அரிய வகை புற்றுநோய் அவருக்கு உள்ளதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.

லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே இந்த நோய் ஏற்படும். இதனை குணப்படுத்த முடியாது என்பதோடு, பாதிக்கப்பட்டவரின் உயிரை காப்பாற்றவும் முடியாது. இதன்படி, கீமோதெரபி செய்துகொண்ட பிறகும், இன்னும் சில மாதங்கள்தான் மிச்சாம் உயிருடன் இருப்பார் என டாக்டர்கள் காலக்கெடு நிர்ணயித்துள்ளனர். தற்சமயம் மரண படுக்கையில் உள்ள மிச்சாம், கிறிஸ்துமஸ், புத்தாண்டை மருத்துவமனையிலேயே கொண்டாடி வருகிறார்.
ஆனாலும், அவர் முகம் புன்னகையுடன் காணப்படுகிறது. சிரிப்பை நிறுத்திவிட்டு, மரணத்தை தடுக்க பிரார்த்தனை செய்யும்படி மருத்துவர்கள் கோரினாலும், அதனை மிச்சாம் நிராகரித்துவிட்டார். சிரித்த முகமாகவே தனது அன்றாட சிகிச்சை மற்றும் மருந்துகளை எதிர்கொண்டு வருகிறார். மரணத்தைக் கண்டு சிரிப்பதை விட, புன்முகத்துடன் எதிர்கொள்ளவே விரும்புகிறேன், என அவர் குறிப்பிட்டு, பலரையும் வியப்படைய செய்துள்ளார்.