தீடீரென்று முடிவுக்கு வந்த விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியல்! பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்

சமீபகாலமாக சீரியல் மோகம் அனைவரிடமும் அதிகரித்து வருகின்றது. சீரியல், காமெடி, நடனம், பாடல், என பல வருடங்களாக மக்கள் மகிழ வைத்து வரும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. இதில் ரசிகர்கள் மனதில் இருந்து இதுவரை நீங்காத நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்றால் கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர், மௌன ராகம், கே.பி.ஒய் சாம்பியன்ஸ் என பலவற்றை கூறி கொண்டே போகலாம்.

அணைத்து பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் தனது தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்து வருகின்றனர் விஜய் டிவி. அப்படி இதுவரை மக்கள் மகிழ வைத்துக் கொண்டிருந்த சீரியலில் ஒன்று தான் ‘ஆயுத எழுத்து’. கதாநாயகி மாவட்ட ஆட்சியராகவும், கதாநாயகன் அம்மா பிள்ளையாகவும் கதைக்களம் கொண்டு எடுக்கப்பட்டு மிக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருந்த சீரியல் தான் ஆயுத எழுத்து.

இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொடர்களில் ஒன்றான ‘ஆயுத எழுத்து’, இன்னும் நிறைய திருப்பங்களுடன் ஓடும் என்று எதிர்பாத்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. விறுவிறுப்பாக, பல எதிர்பாராத திருப்பங்களுடன், சென்று கொண்டிருந்த இந்த தொடர் தீடீரென்று நிறுத்தப்பட்டது, ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *