திருமணம் மேடையில் மயங்கி விழுந்த மணப்பெண்! கர்ப்பமாக இருப்பது அம்பலமாகியது!! அதிர்ச்சியில் உறைந்த புதுமாப்பிள்ளை!

சமீபகாலமாக நம்மளை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தும் சம்பவங்கள் நெறய நடந்து வருகின்றன. மேற்கு வங்காளத்தில் அப்படி பட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது.. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பிர்பும் கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், இளைஞருக்கும் நேற்று முன் தினம் திருமணம் நடைபெற்றது. தாலி கட்டிய பின்னர் மற்ற சடங்குகள் நடைபெற்று கொண்டிருந்தன. அப்போது நாற்காலியில் மணமகனும், மணப்பெண்ணும் உட்கார்ந்திருந்த போது மணப்பெண்ணுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு மருத்துவர் வரவழைக்கப்பட்ட நிலையில் பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது மணப்பெண் ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர் கூற மணமகன் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த மணமகன் வீட்டார் மணப்பெண் வீட்டாருடன் சண்டை போட்டனர்.  எங்களை ஏமாற்றி எப்படி திருமணம் செய்துவிட்டீர்களே என கத்தினார்கள்.

சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பொலிசார் நடத்திய விசாரணையில் நண்பர் ஒருவரிடம் பழகியதன் மூலம் மணப்பெண் கர்ப்பமானது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இச்சம்பவம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.