திருமணம் செய்வதாக கூறி திருநங்கையுடன் உல்லாசம்! பிறகு இளைஞர் செய்த வெறிச் செயல்!

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே திருநங்கையைக் கொன்ற காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். சதாசிவ நகர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் திருநங்கையான நசாக் அபித் ஷேக். இவரை யெரவாடாவைச் சேர்ந்த அர்பாஸ் அகமது ஷேக் என்ற 20 வயது இளைஞர் காதலித்து வந்தார். இருவரின் காதல் கதையும் நன்றாகத் தான் சென்று கொண்டிருந்தது அர்பாஸ் அகமது வேறு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்யும் வரை. திருநங்கையுடனான காதல் அலுத்துப் போக அர்பாஸ் வேறு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்து.

நசாக் அபித்திடம் தெரிவித்தபோது அதிர்ச்சியடைந்தார்.  அவர் தங்களுக்கிடையே உள்ள உறவு குறித்து வெளியுலகத்துக்கு தெரிவிக்கப் போவதாகக் கூறியதையடுத்து அர்பாஸ் அதிர்ச்சி அடைந்தார். மிரட்டலை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்ட அர்பாஸ், நசாக் அபித்தை கொன்றுவிட முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

தனது திட்டப்படி அர்பாஸ், நசாக்கின் கழுத்தை கத்தியால் அறுத்ததில் அவர் உயிரிழந்தார்.  இது தொடர்பான அக்கம்பக்கத்தினரின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார்

அர்பாசை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். காதலித்துவிட்டு. திருநங்கையை கொலை செய்தஇளைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!