திருமணமான பெண்ணை ஒரே நேரத்தில் காதலித்த இளைஞர்கள்: கொலையில் முடிந்த கூடா நட்பு

சமீபத்தில் சுருளிப்பட்டி அருகே உடல் சிதைந்த நிலையில் இளைஞரின் ஒருவரிடம் சடலம் கண்டெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை அறிக்கைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணையில் இறந்துபோனவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் 26 வயதான சிவநாதன் என்பது தெரியவந்துள்ளது. இறந்தவரின் செல்போனை கைப்பற்றி கொலை செய்யப்படுவதற்கு முன்பு அவர் யார்,யாருடன் பேசியுள்ளார் என்ற விவரத்தை சேகரித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் கொலை செய்யப்படுவதற்கு முன்பு சிவநாதன் செல்போன் எண்ணுக்கு அவரது நண்பர் சுருளிப்பட்டியை சேர்ந்த சிலம்பரசன் அதிக நேரம் பேசியுள்ளது தெரியவந்தது.

எனவே பொலிசார் சிலம்பரசன் மீது சந்தேகம் அடைந்து அவரிடம் குறுக்குவிசாரணை நடத்தியதில் அவர் அளித்துள்ள வாக்குமூலம் பின்வருமாறு, கார் ஓட்டுநராக இருக்கும் நானும், சிவநாதனும் நண்பர்கள். எங்கள் இருவருக்கும் இன்னும் திருமணமாகவில்லை. இந்நிலையில் திருமணமான பெண்ணுடன் எனக்கு கூடா நட்பு ஏற்பட்டது. எனக்கு தெரியாமல் சிவநாதனும் அப்பெண்ணுடன் நட்பில் இருந்தார். இது எனக்கு தாமதமாக தெரியவந்ததையடுத்து கோபம் வந்தது. இதனால் அவனை கொலை செய்ய திட்டமிட்டேன்.

நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்த செல்லலாம் என்று சிவநாதனை செல்போனில் அழைத்தேன். மது அருந்திக்கொண்டிருந்த போது அந்த பெண் குறித்து பேசும் போது வாக்குவாதம் ஏற்பட்டு எனது வேஷ்டியால் சிவநாதனின் கழுத்தை இறுக்கினேன். மற்றவர்கள் மதுபாட்டில் மற்றும் கல்லால் சிவநாதனின் முகம், கழுத்து பகுதியில் குத்தினார்கள். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர், நாங்கள் கேரள மாநிலத்திற்கு தப்பி சென்றுவிட்டோம்.

இதற்கிடையில்தான் செல்போன் வைத்து பொலிசார் எங்களை கண்டுபிடித்துவிட்டனர் என வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக சிலம்பரசன், பாண்டீஸ்வரன் (25) ஆகிய 2 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published.