தென்னிந்திய சினிமாவிலும் பாலிவுட் சினிமாவிலும் முன்னணி நடிகையாக பிரபலமானவர் நடிகை ஸ்ரீதேவி. சில ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்து அனைத்து சினிமாத்துறையையே அதிரவைத்தார்.
இந்நிலையில் பாலிவுட் சினிமாவின் தயாரிப்பாளர் போனி கபூர் – மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது நடிகையாக களமிரங்கி நடிகையாக பலபடங்களில் நடித்து வருகிறார்.

அவரின் தந்தை தயாரிக்கும் அஜித்தின் வலிமை படத்தில் ஜான்வி கபூர் நடிப்பார் என்று சிலர் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் சமுகவலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி சமீபத்தில் ஒரு பதிவினை பதிவிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.
அதில் குழந்தை உங்களை பார்க்கிறது என்று பதிவிட்டு அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதற்கு அவரது தோழியும், பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷியின் மகளுமான தான்ஷி, “இதில் யாரு குழந்தை? உனக்கு குழந்தை வேண்டுமா?, என்று கிண்டலாக கேட்டுள்ளார்.
அதற்கு “ஆம் எனக்கு குழந்தை வேண்டும்” என்று பதிலளித்துள்ளார், இதை பார்த்த ரசிகர்கள் திருமணமாகாமல் எப்படி குழந்தைக்கு ஆசைப்படுவீர்கள் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.