சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவும், தொழிலதிபர் விசாகனுக்கும் கடந்த மாதம் 10 ஆம் தேதி, சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணத்திற்கு பின் சௌந்தர்யா தன்னுடைய ஹனிமூன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது முதல் முறையாக கணவருடன் காரில் சென்றுகொண்டிருக்கும்போது, மகன் வேத், விளையாட்டு ட்ரில்லிங் மெஷின் வைத்து விளையாடுவதை வீடியோவாக எடுத்து போஸ்ட் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவ துவங்கியுள்ளது.
Our very own lil mechanic #Ved fixing the car ❤️? ????? #ChildrenGrowUpSoSoon #LoveBeingMommy #Blessed #Grateful #ThankYouGod pic.twitter.com/rOdD917t2f
— soundarya rajnikanth (@soundaryaarajni) March 8, 2019