தினமும் வீட்டிற்கு வரும் 5000 கிளிகள்.. 50 சதவிதம் வருமானத்தை செலவிடும் தம்பதி! குவியும் பாராட்டுகள்

இப்போதெல்லாம் கிராமப் பகுதியிலேயே பறவைகள், கிளிகளைப் பார்ப்பது அரிதாகி வருகிறது. இப்படியான சூழலில் ட்ராபிக் நெருக்கடி மிகுந்த சென்னையில் ஒருவீட்டுக்கு தினமும் 5000 கிளிகள் வருகிறது என்றால் ஆச்சர்யம் ஆனதுதானே? சென்னை சிட்டிக்குள் இருக்கிறது சிந்தாகிரிப்பேட்டை. இங்குள்ள சுதர்சன் சாஹ்_வித்யா தம்பதியினரின் வீட்டுக்கு தினமும் 5000 கிளிகள் வரை உணவு சாப்பிட வருகின்றன. சுதர்சன் சாஹ் எலக்ட்ரிக்கல் கடை வைத்திருக்கிறார். தன் மாதாந்திர வருமானத்தில் 50 சதவிகிதத்தை கிளிகள், சாலையில் திரியும் பிராணிகளுக்கு உணவிட இவர் செலவு செய்கிறார். மரங்களை வீட்டுக்கு ஒன்று என்ற அளவிலேனும் வளர்க்க வேண்டும். அப்போதுதான் கிளிகளுக்கு வசிக்கவேனும் இடம் கிடைக்கும். மொட்டைமாடியில் தினமும் கொஞ்சம் அரிசியை போட்டாலே பறவைகள் வரத் துவங்கிவிடும். இது நாம் வாயில்லாப் பிராணிகளுக்குச் செய்யும் பெரிய சேவை.’’என மனம் நெகிழ்வுடன் சொல்கிறார்கள் சுதர்சன்_வித்யா தம்பதியினர்!

Leave a Reply

Your email address will not be published.