திடீர் மூச்சுத்திணறலால் அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள்..!

உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. மும்பையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா பச்சன் இருவரும் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இருவரும் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு 77 வயதை கடந்த முன்னர் பிரபல பாலிவுட் அமிதாப் பச்சன் ஏற்கனவே சில உடல்நல கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுகொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவரது குடும்பத்தருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவரது மகன் மற்றும் பிரபல நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும், அபிஷேக் பச்சனின் மனைவியும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது மகள் ஆராத்யா பச்சனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் இருவரும் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர். தற்போது அவர்கள் இருவருக்கும் மூச்சு திணறல் ஏறப்டத்தை அடுத்து, இருவரும் நானாவதி மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் பிராத்தனை செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.