திடீர் கோடீஸ்வரர் ஆன ரப்பர் தொழிலாளி! வீட்டை இழக்கவிருந்த நிலையில் அடித்த அதிர்ஷ்டம்! வாழ்க்கையே மாற்றிய சம்பவம்

இந்தியாவில் வாங்கிய கடனுக்காக வங்கி, வீட்டை பறிக்க தயாரான நிலையில் ரப்பர் தொழிலாளிக்கு லொட்டரியில் ரூ 12 கோடி பரிசு விழுந்துள்ளது. கேரளாவின் கைதாச்சல் கிராமத்தை சேர்ந்தவர் போருண்ண ராஜன். ரப்பர் அறுக்கும் தொழிலாளியான இவருக்கு கேரள அரசின் கிறிஸ்துமஸ் பண்டிகை லொட்டரியில் ரூ. 12 கோடி விழுந்தது. தனக்கு லொட்டரியில் பரிசு விழ தன் வீட்டருகேயுள்ள முத்தப்பன் சாமிதான் காரணம் என்று ராஜன் கருதுகிறார்.

இதனால், முத்தப்பன் கோயிலை பெரிதாக எடுத்து கட்டுவதற்கு தனக்கு விழுந்த பரிசு தொகையில் இருந்து குறிப்பிடத்தக்க தொகையை ராஜன் ஒதுக்கியுள்ளார். இது குறித்து ராஜன் கூறுகையில், வங்கியின் நான் வாங்கியிருந்த கடனை அடைக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தேன். எனது வீட்டை கூட பறிமுதல் செய்ய வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர்.

இந்த சமயத்தில்தான் லொட்டரி சீட்டை வாங்கினேன். என் முத்தப்பன் அருளால் இக்கட்டான சூழலில் எனக்கு லாட்டரியில் பரிசு விழுந்தது. இந்த ஒற்றை லொட்டரியால் என் வாழ்க்கையே மாறிப் போனது என கூறியுள்ளார். ராஜனுக்கு மனைவி மற்றும் இரு மகள்கள், மகன் உண்டு. தற்போது, லொட்டரியில் விழுந்த பணத்தை கொண்டு புது வீடு கட்டுவதற்கான வேலையை அவர் தொடங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!