திடீரென மன்னிப்புக் கேட்ட நாஞ்சில் விஜயன்..! அதிருப்தியில் வனிதா..! கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

வனிதா இந்த பெயர் தான் இணைய உலகத்தின் ஹாட் டாபிக். வனிதா பீட்டர் பால் திருமணத்தை குறித்து சூரியாதேவி பல கருத்துக்களை தெரிவித்து வந்தார். இந்நிலையில் பிக் பாஸ் வனிதா விஜயகுமாரிடம் நாஞ்சில் விஜயன் மன்னிப்புக் கேட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுபற்றி நடிகை வனிதா விஜயகுமார் பதிவிட்டுள்ளார். நாஞ்சில் விஜயன் நேற்று என்னிடம் பேசினார். நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொன்னார். அவரும் நானும் சந்தித்தது கூட இல்லை. ஆனால், இந்த குழப்பங்கள் அனைத்துக்கும் சூரியாதேவி தான் காரணம். இடையில் கஸ்தூரி உள்ளே புகுந்து சூழலை தவறாகப் பயன்படுத்தி உள்ளார்.

மற்றவர்களின் பிரச்னைகளை ஆராய்வதை விட்டுவிடுங்கள். அவர்கள் பிரச்னையை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள். இடையில் நீதிபதியாகவோ, வழக்கறிஞராகவோ விளையாட முயற்சிப்பதுதான் பிரச்னையை பெரிதாக்குகிறது. நாஞ்சில் விஜயனிடம் அவரது வீடியோக்கள் பற்றிய எனது அதிருப்தியை வெளிப்படுத்தினேன்.

அதை விரைவில் நீக்குவதாகவும் அதுபற்றி தானே விளக்கம் ஒன்றை வெளியிடுவதாகவும் நாஞ்சில் விஜயன் சொன்னார். அவர் தேவையில்லாமல் இந்த விஷயத்தில் இழுத்து விடப்பட்டுள்ளார் என நினைக்கிறேன். அவர் திறமையான இளைஞர். வளர்ந்து வரும் நேரத்தில் சர்ச்சைகள் அவருக்கு தேவையில்லை என்று நினைத்ததால் அவர் மன்னிப்பை ஏற்றுக்கொண்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் கடும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!