திடீரென நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த்! மகன் அளித்த தகவல்..

தமிழ் சினிமாவில் தற்போதைய முன்னணி நடிகர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜயகாந்த். அதன் பின்னர் வைதேகி காத்திருந்தாள், புலன் விசாரணை, உண்மை விழிகள், சொக்கத் தங்கம் போன்ற பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். கொண்டாடப்பட்டார். படங்களில் வருவது போல நிஜத்திலும் ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கடந்த செப்.22-ம் தேதி கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.

இதையடுத்து, சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்பு அவருடைய மனைவி பிரேமலதாவும் கொரோனா தொற்று பாதிப்பால் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருவருமே கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து அக்டோபர் 2-ம் தேதி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்கள். இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் விஜயகாந்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் பரவியது.

தேமுதிக சார்பில் வெளியிட்ட அறிக்கையில், வழக்கமான பரிசோதனைதான். வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவித்தார்கள். இதையடுத்து, விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வழக்கமான பரிசோதனைக்காக அப்பா மருத்துவமனை சென்றுள்ளார். தயவுசெய்து வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.