தாய் பாசத்தில் மனிதர்களை மிஞ்சும் அளவில் மாடு செய்த செயல்! காண்போரை மெய் சிலிர்க்க வைத்த காட்சி

பாசம் மனிதர்களுக்கு மட்டுமானது என நாம் புரிந்துவைத்துள்ளோம். ஆனால் பாசத்தில் மனிதர்களுக்கும், ஐந்தறிவு ஜீவன்களுக்கும் பெரிய பாகுபாடு எதுவும் கிடையாது. இங்கும் அப்படிதான். வீட்டில் இருந்து காலையில் மேய்ச்சலுக்காக வெளியே வந்த பசுமாடு ஒன்று மாலை வெகுநேரம் ஆகியும் வழக்கம் போல் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் மறுநாள் காலையில் தன் உரிமையாளரின் வீட்டு வாசலுக்கு வந்த மாடு முன்னே நடக்க உரிமையாளர் பெண்மணி மாட்டின் பின்னால் நடந்து சென்றார். மாடு அடர்ந்த காடு பகுதிக்குள் அழகான கன்றுக்குட்டியை பிரசவித்து போட்டிருந்தது. நேற்று மேய்ச்சலுக்கு வந்தபோதே கன்று ஈன்றுவிட்ட பசு, ஒருநாள் முழுவதும் தன் குட்டிக்கு காவலாக பக்கத்திலேயே நின்றுவிட்டு மறுநாள் வீட்டுக்கு வந்தது ஆச்சர்யத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதோ அந்த வீடியோ…

Leave a Reply

Your email address will not be published.