தாமிரபரணி படத்தில் நடித்த பானுவிற்கு இவ்வளவு பெரிய மகளா? அம்மாவை மிஞ்சிய அழகு! புகைப்படம் இதோ

குழந்தை நட்சத்திரமாக மலையாள சீரியலில் அறிமுகமானவர் நடிகை பானு. தமிழில் 2007ஆம் ஆண்டு தன் 16 வயதில் தாமிரபரணி படத்தில் நடித்தார். இதிலிருந்து இவருக்கு பெரும் ரசிகர் கூட்டம் உருவானது. பின்னர் தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்ப்பர்க்கப்பட்ட இவர் அதன்பின்னர் அழகர் மலை, சட்டப்படி குற்றம், பொன்னர் சங்கர் என ஒரு சில சுமார் படங்களில் மட்டுமே நடித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என 30க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் பானு.

பெரும்பாலும் மலையாள படங்களில் நடித்த பானு, தனது 24 வயதில் ரிங்க்கு டோமி என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். இந்த தம்பதிக்கு 2016 ஆம் ஆண்டு கியாரா என்னும் பெண் குழந்தை பிறந்தது. திருமணத்துக்கு பிறகு தமிழில் வாய்மை மற்றும் பாம்பு சட்டை உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்தார் பானு.

தற்போது தனது குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு அடுத்த நல்ல பட வாய்ப்புகள் வரும் என காத்துகொண்டு இருக்கிறார் பானு. இந்நிலையில் அவரது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படதை வெளியிட்டு உள்ளார். சின்ன பொண்னாக இருக்கும் இந்த நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா என ஆச்சரியத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.