தளபதி 65 அறிவிப்பு நின்றதற்கு இதுதான் காரணமா..? இயக்குனர் முருகதாஸுக்கு விஜய் கொடுத்த அதிர்ச்சி!!

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் தளபதி விஜய். உலகெங்கும் இவருக்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் மாஸ்டர். கொரோன காரணமாக மாஸ்டர் பட ரிலீஸ் தள்ளிவைக்கப் பட்டுள்ளது. இதன்பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 65வது விஜய் படத்தை நடிக்க போகிறார்.

மேலும் இப்படத்தின் முழு பட்ஜெட் 130 கோடி என்றும், அதில் விஜயின் சம்பளம் 70 மற்றும் முருகதாஸ் சம்பளம் 10 என்றும் தெரியவந்தது. விநாயகர் சதுர்த்தி நேற்று இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என சன் நியூஸ் தொலைகாட்சியில் கூறினார்கள். ஆனால் எதிர்பார்த்தபடி நேற்று எந்த ஒரு அறிவிப்பும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து வெளிவர வில்லை.

A.R. Murugadoss

இந்நிலையில் அதற்கு காரணம் தளபதி விஜய் தானாம். ஆம் முருகதாஸ் விஜய்யிடம் இதுவரை பாதி கதை தான் கூறி இருக்கிறாராம். மீதி கதை இன்னும் கூர வில்லையாம். இதனால் சன் பிக்சர்சிடம் இயக்குனர் முருகதாஸ் முழு கதையையும் எனிடம் கூறிய பிறகு நீங்கள் முறையான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுங்கள் என கூறிவிட்டாராம். இதன் காரணமாக தான் விநாயகர் சதுர்த்தி அன்று தளபதி 65 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சன் பிச்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து வரவில்லை.

Leave a Reply

Your email address will not be published.