தளபதி விஜய் வீட்டின் மதிப்பு இத்தனை கோடிகளா? வாய்யடைத்துப்போன ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் இருப்பார் தளபதி விஜய். தனது கடின உழைப்பால் புகழின் உச்சத்திற்கு சென்றவர் தளபதி விஜய். உலகெங்கும் இவருக்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து, வெளிவர காத்திருக்கும் படம் மாஸ்டர். பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முதன்மையான நடிகராகவும் விளங்கி வருகிறார் தளபதி விஜய்.

கடைசியாக வந்த இவரின் பிகில் படமும் வசூல் வேட்டை செய்தது. கொரோனா தாக்கம் காரணமாக மாஸ்டர் படத்தின் ரிலீஸ் சற்று தள்ளிப்போய் இருக்கிறது. ஆனால் 2021ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படம் தான் “தளபதி 65”.

இப்படத்தை சர்கார் படத்திற்கு பின்பு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இந்நிலையில் தளபதி விஜய்யின் சொத்து மதிப்பு ஏறக்குறைய ரூ. 355 கோடி இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தளபதி விஜய் சொந்த வீட்டின் மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 15 கோடி முதல் ரூ. 20 கோடி வரை என கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *