தளபதி விஜய் மற்றும் நடிகர் சூர்யாவின் திரைப்படங்கள் யூடியூபில் சாதனை..! என்ன சாதனை தெரியுமா?

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக விளங்குபவர்கள் தளபதி விஜய் மற்றும் நடிகர் சூர்யா. இருவருக்கும் மிக பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. தமிழ் சினிமாவில் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் சினிமா உலகில் பல சாதனைகளை படைத்தது உள்ளார் தளபதி விஜய். கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான பிரண்ட்ஸ் படத்தில் விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா, தேவயானி, விஜயலக்ஷ்மி என பலர் நடித்து வெற்றியடைந்த படம்.

இவர்களின் திரைப்படங்கள் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸ் பல சாதனைகளை புரிந்து வருகிறது. மேலும் தற்போது தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படமும், நடிகர் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படமும் கொரோன காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. லாக்டவுன் முடிந்தவுடன் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு இவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் ஜில்லா மற்றும் அஞ்சான்.

மேலும் இந்த இரண்டு திரைப்படங்களும் ஹிந்தி மொழியில் டப் செய்யப்பட்டு யூடியூபில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் தற்போது அஞ்சான் ஹிந்தி டப் செய்பட்ட படம் (150 மில்லியன்) பார்வையாளர்களை பெற்றுள்ளது. ஜில்லாவின் ஹிந்தி டப் செய்பட்ட படம் (101 மில்லியன்) பெற்று இந்த இரண்டு திரைப்படங்களும் சாதனை படைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.