தளபதி விஜய் மடியில் இருக்கும் இந்த குழந்தை யாருன்னு தெரியுமா? அடடே இந்த பிரபலத்தின் மகனா? நீங்களே பாருங்க…!

இளையதளபதி விஜய்க்கு ரசிகர்கள் இல்லாத வீடுகளே இல்லை என சொல்லலாம். தளபதி மடியில் ஒரு குழந்தை உட்கார்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுகுறித்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் சந்திரசேகரின் மகன் என அடையாளத்தில் இருந்த விஜய் இப்போது, எஸ்.ஏ.சந்திரசேகருக்கே விஜயின் அப்பா என்னும் அடையாளத்தைக் கொடுத்திருக்கிறார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை இளையதளபதி விஜய்க்கு ரசிகர்கள் இல்லாத தெருவே ஏன் வீடே இல்லை என்றே சொல்லலாம்.

மாஸ்டருக்குப் பிறகு. தளபதியின் திரைப்படங்கள் வெளியாகாத நிலையில் இந்த லாக்டவுண் நேரத்தில் விஜயின் பழைய புகைப்படங்கள், நினைவுகளை அவரது ரசிகர்கள் வெளியிட்டுவருகின்றனர்.

அதற்கு நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருக்கிறது. அந்தவகையில் இப்போது தளபதி விஜய், மடியில் ஒரு குழந்தையை தூக்கிவைத்துக்கொண்டு நிற்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகிவருகிறது. அந்தக் குழந்தை வேறு யாரும் இல்லை. நம்ம பிக்பாஸ் பிரபலம் வனிதாவின் மகன் ஸ்ரீ ஹரிதான்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வனிதா வீட்டில் விசேசம் ஒன்று நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு தன் மனைவி சங்கீதாவுடன் போயிருந்தார் தளபதி விஜய். அப்போது, எடுத்த இந்த புகைப்படமே இப்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *