தளபதி விஜய் நேரில் சென்று எஸ்.பி.பியின் உடலுக்கு இறுதி அஞ்சலி..! புகைப்படங்கள் இதோ..

தமிழில் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகில் முன்னணி பாடகராக திகழ்ந்து வந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நலக் குறைவால் காலமானார். இவர் கொரோனா தொற்று ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகிறார். ஆனால் இன்று உடல்நல குறைவு காரணமாக மதியம் 1.04 மணி அளவில் உயிரிழந்துள்ளார் எஸ்.பி.பி. இவரின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்லாமல் இந்திய திரையுலகிற்கே பெரும் இழப்பையும், பெரும் துயரத்தையும் தந்துள்ளது.

 

பாடகர் எஸ்.பி.பி அவர்கள் எத்தனையோ பாடல்கள் மூலம் எல்லோருக்கும் ஆறுதல் கொடுத்துள்ளார். அவர் பாடல்களை கேட்கும் போது நமது மனது அப்படியே லேசாகும். ஆனால் இன்று அவர் நம்முடன் இல்லை, இது எல்லோருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கொரோனா தாக்கத்தால் பல கஷ்டங்களுக்கு உள்ளாகி கடைசியில் சிகிச்சை பலன் இன்றி நம்மை விட்டு பிரிந்துவிட்டார்.

இவரது உடல் மருத்துவமனையில் இருந்து அவரின் நுங்கம்பாக்கம் வீட்டிற்கு எடுத்து வரப்பட்டது. அதன்பின் நேற்று இரவு 8.00 மணி அளவில் எஸ்.பி.பியின் உடல் தாமைரைப்பாக்கத்தில் உள்ள அவரின் பண்ண வீட்டிற்கு எடுத்த வரப்பட்டுள்ளது. பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வரும் நிலையில் நேரில் சென்று தளபதி விஜய் தனது அஞ்சலியை செலுத்தியுள்ளார். புகைப்படங்களுடன் இதோ….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *