தளபதி விஜய்யின் சூப்பர்ஹிட் பட இயக்குனர் திடீர் மரணம்..! சோகத்தில் திரையுலகினர்..

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் இருப்பார் தளபதி விஜய். பிரபல இயக்குனரின் மகன் என்ற பெயரோடு சினிமாவில் நுழைந்தாலும் தனது கடின உழைப்பால் புகழின் உச்சத்திற்கு சென்றவர் தளபதி விஜய். உலகெங்கும் இவருக்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் மாஸ்டர்.

இதன்பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 65வது விஜய் படத்தை நடிக்க போகிறார். விஜய் நடித்த வேட்டைக்காரன் என்ற திரைப்படம் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில் இந்த திரைப்படத்தை இயக்கியவர் இயக்குநர் பாபு சிவன் என்பது தெரிந்ததே. இவர் ஏற்கனவே விஜய் நடித்த ’குருவி’ மற்றும் ’பைரவா’ ஆகிய படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலம் இன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் பாபு சிவன் தற்போது சிகிச்சை பலனின்றி காலமானார். இதனையடுத்து திரையுலக பிரமுகர்கள் அவருடைய மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் பட இயக்குனர் ஒருவர் திடீரென காலமானது கோலிவுட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.