உலகெங்கும் கொரோனா காரணமாக பலரும் உயிரிழந்தனர். நேற்று தமிழ் இசையுலகில் ஜாம்பவான் கொரோனா காரணமாக அனுமதிக்கப்பட்டவர் உடல்நல குறைவு காரணமாக நேற்று மரணமடைந்தார். இவர் தமிழில் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகில் முன்னணி பாடகராக திகழ்ந்து வந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம். இவர் கொரோனா தொற்று ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தார்.

ஆனால் நேற்று உடல்நல குறைவு காரணமாக மதியம் 1.04 மணி அளவில் உயிரிழந்துள்ளார் எஸ்.பி.பி. இவரின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்லாமல் இந்திய திரையுலகிற்கே பெரும் இழப்பையும், பெரும் துயரத்தையும் தந்துள்ளது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் உச்ச நட்சத்திரமாகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் தளபதி விஜய். நடிகர் விஜய் இன்று, மறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்களின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்றிருந்தார்.
எஸ்.பி.பி அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு வெளியே வரும் பொழுது ரசிகர்களால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது கூட்டத்தில் விஜய்யின் ரசிகர் ஒருவர் தனது செருப்பை தவறவிட்டார். கீழே விழுந்த ரசிகரின் செருப்பை தனது கையால் எடுத்துக்கொடுத்துள்ளார் தளபதி விஜய் அந்த வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. இதோ அந்த வீடியோ…
Respect To The Core Thalaivaa ????♥️@actorvijay ♥️ pic.twitter.com/mWbviDt6Cm
— Pokkiri Santhosh (@PokkiriSanty) September 26, 2020