தளபதியின் தலைவா பட ஸ்டில்லை பச்சை குத்திய கிரிக்கெட் வீரர்! இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்…

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் இருப்பார் தளபதி விஜய். தனது கடின உழைப்பால் புகழின் உச்சத்திற்கு சென்றவர் தளபதி விஜய். உலகெங்கும் இவருக்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர். பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முதன்மையான நடிகராகவும் விளங்கி வருகிறார் தளபதி விஜய். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்திய அளவில் கவனம் பெற்று வருகிறது.

அந்த வகையில் சென்ற வருடம் வெளியான பிகில் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. அதனை தொடர்ந்து தற்போது இரண்டு வெற்றிப்பட இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து, வெளிவர காத்திருக்கும் படம் மாஸ்டர். இப்படமும் விரைவில் வெளியாகும் என நம்பப்படுகிறது.

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் வருண் சக்ரவர்த்தி. இவர் தமிழ் நாட்டை சேர்ந்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தனது இடது கையில் தளபதி விஜய் நடித்த தலைவா திரைப்படத்தின் ஸ்டில்லை பச்சை குத்தியுள்ளார். ஆம் தற்போது அவரின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே செம ட்ரெண்டாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *