தல அஜித் லாக்டவுனில் என்ன வேலை செய்தார் தெரியுமா? பாராட்டி தள்ளும் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் தல அஜித். அஜித் படம் என்றாலே திருவிழா காட்சியளிக்கும் தியேட்டர்கள். அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் அஜித். இன்றுவரை, அஜித் அவர்கள் 50 க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அஜித் சினிமா நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர். சிறந்த குணமுடையவர், பெரிய நடிகர் என்று எந்த பந்தாவும் இருக்காது என இப்படி அவருடன் பழகியவர்கள் கூற கேட்டிருப்போம்.

எப்போதும் தன் வேலையில் கவனம் செலுத்துபவர். இப்போது கூட அரசு அனுமதி அடுத்த நாளே வலிமை படப்பிடிப்பை தொடங்கி விடலாம் என படக்குழுவிடம் அஜித் கூறியிருந்ததாக செய்திகள் வந்தன. இதனால் ரசிகர்கள் மற்றவர்கள் கஷ்டத்தை எப்போதும் உணற கூடியவர் அஜித் என பாராட்டி வந்தார்கள். இப்போது இந்த லாக் டவுனில் தல புதிய விஷயத்தில் ஆர்வம் காட்டியுள்ளார்.

அதாவது தனது வீட்டின் பின்னால் பூ தோட்டம் அமைத்து அதில் அதிக கவனம் செலுத்தியுள்ளாராம். அந்த தோட்டத்திற்கு தேவையான எல்லா வேலையையும் அவரே செய்தாராம். 75 விதமான பூக்களை வளர்த்து வரும் அஜித் மூலிகை தோட்டத்திலும் சில நேரம் கவனம் செலுத்துவாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!