தல அஜித் ஜெர்மனி சென்ற காரணம் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க ..!!!

நடிகர் அஜித் நடிப்பு மட்டுமின்றி கார் ரேஸ், பைக் ரேஸ் போன்றவற்றில் கைதேர்ந்தவர். புகைப்படக்கலை, மற்றும் ஆளில்லா விமானங்களை இயக்குவதிலும் கவனம் செலுத்தி வரும் அவர், அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸில் பயிலும் ஏரோநாட்டிகல்

மாணவர்களுக்கு ட்ரோன் குறித்து ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அவர் ஆலோசனையின்படி தக்‌ஷா குழு சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த `Medical Express 2018 UAV Challenge’ போட்டியில் கலந்து கொண்டு சர்வதேச அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தது. இதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.அஜித்தின் விஸ்வாசம் பட பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தக்‌ஷா குழுவினருடன் ட்ரோன் தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். தற்போது தக்‌ஷா குழுவின் அடுத்த திட்டம் குறித்து ஆலோசிக்க நடிகர் அஜித் ஜெர்மனி சென்றுள்ளார்.

ஜெர்மனியில் ஹெலிகாப்டர் நிறுவனத்துடன் அஜித் ஆலோசனை வாரியோ என்ற ஹெலிகாப்டர் நிறுவன குழுவினருடன் நடிகர் அஜித் ஆலோசனையில் ஈடுபட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.வாரியோ என்ற ஹெலிகாப்டர் நிறுவன குழுவினருடன் நடிகர் அஜித் ஆலோசனையில் ஈடுபட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published.