தல அஜித்தின் வீட்டில் இவ்வளவு வசதிகளா..? இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்…

தல அஜித் தமிழ் சினிமாவில் முக்கியமாக நடிகர். அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் அஜித். இன்றுவரை, அஜித் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா ரசிகர்களால் தல என்று கொண்டாடப்படும் நடிகர் இவர். அஜித் வீடு என்று இணையத்தில் சில புகைப்படங்கள் தீயாய் பரவி வருகின்றது.

காதல் மனைவி ஷாலினிக்கு அன்பான அக்கறையான கணவராக, மனைவியின் பேட்மிண்டன் பயிற்சிகளை ஊக்குவிப்பவராக இருந்து வருகிறார் அன்புக் கணவர் அஜித். பெண் குழந்தை ஒன்றும் ஆண் குழந்தை ஒன்றும் இந்த தம்பதியரின் வாழ்க்கையை மேலும் அழகாக்கியது. இந்நிலையில் நவீன வகையில் உருவாகியுள்ள வீடு ஒன்றின் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. அவ்வீட்டின் கதவு முதல் சமையலறை வரை எல்லா கதவுகளும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.

ஆனால், இதுக்குறித்து விசாரிக்கையில் இது உண்மையில்லை, அஜித் வீடு இப்படியிருக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. அது சினிமா நட்சத்திரமாக இருக்கும் ஒருவர் நடிக்க வந்த இத்தனை ஆண்டுகளில் தான் பணி புரியும் துறையில் கடினமாக உழைப்பதுடன், சொந்த வாழ்க்கையிலும் ஹீரோவாக இருப்பது பாராட்டுக்குரியது. இப்படியான சூழலில் வதந்திகளும் பரவி வருவது புதிது கிடையாது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published.