தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தல அஜித். தமிழ் திரையுலகில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படம் நடிகர் தல அஜித். அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் அஜித். தல அஜித்தின் படம் வந்தாலே தியேட்டரே திருவிழா கோலமாகும். இன்றுவரை, அஜித் அவர்கள் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா ரசிகர்களால் தல என்று கொண்டாடப்படும் நடிகர் அஜித்.
இவர் நடிப்பில் கடந்த வருடம் நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம் ஆகிய படங்கள் வெளிவந்தது. போனி கபூர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து அஜித் வலிமை படத்தின் வேலைகளில் உடனேயே இறங்கினார். படத்திற்கான படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் செட் அமைத்து நடந்து வந்தது, இடையில் கொரோனா நோய் தொற்று அனைத்தையும் நிறுத்தியது.
தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது, சில புகைப்படங்கள் வெளியானது அதையும் நாம் பார்த்திருக்கிறோம். இந்த நேரத்தில் தான் ஒரு சூப்பர் தகவல் கசிந்துள்ளது. அதாவது இப்படத்தின் ஃபஸ்ட் லுக் வரும் ஆயுதபூஜை ஸ்பெஷலாக வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால் ஃபஸ்ட் லுக் வந்தால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.