தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் தல அஜித். கடந்த ஆண்டு வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் வினோத் இயக்கி வரும் வலிமை படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார் அஜித். ரசிகர்களால் தல என அழைக்கப்படும் அஜித் எந்தளவுக்கு பிரபலமாக இருக்கிறாரோ, அதே அளவுக்கு அவரது மனைவி ஷாலினி, மகள் அனுஷ்கா மற்றும் மகன் ஆத்விக் ஆகியோர் சமூக வலைதளங்களில் அடிக்கடி தோன்றி வைரலாகி வருகின்றனர்.

அஜித்தை பொருத்தவரை அவர் உண்டு அவர் வேலை உண்டு என இருப்பதால் பொது இடங்களுக்கு பெரும்பாலும் வருவது இல்லை. அதேபோல் தான் தனது குடும்பத்தையும் வைத்து இருப்பார். இதையும் மீறி மால்கள், விமான நிலையங்கள், திரையரங்குகள் என அவர்கள் செல்லும்போது இவர்களுடன் யாராது செல்பி எடுத்துக் கொள்ள நினைத்தால் உடனே எந்த தடையும் இன்றி போஸ் கொடுப்பார்கள்.
தல அஜித்தின் மகன் ஆத்விக் மற்றும் மனைவி ஷாலினி ஆகியோருடன் ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுத்துக்கொண்டது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு சின்ன தல நல்லா வளர்ந்துட்டாரு என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram