தமிழ் சினிமாவில் ரசிகர்களால் தல என்று கொண்டாடப்படும் நடிகர் தல அஜித். பப்ளிசிட்டியை விரும்பாதவர் எளிமையாக இருப்பதுடன் பட வேலைகள் போக விளையாட்டு, அறிவியல் கண்டுபிடிப்பு என கவனம் செலுத்தி வருகிறார். தல அஜித் அவரின் ஸ்டைலை பற்றி பெருமையாக குறிப்பிடாதவர்கள் இல்லை. இப்படி கூறுகையில் அவரின் படங்களில் முக்கியமான ஒன்றான வரலாறு படத்தை சொல்லியே ஆக வேண்டும்.
அப்பா, மகன்கள் என மூன்று கெட்டப்களில் அவர் இப்படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். அதிலும் அவரின் பரதநாட்டியம் அனைவரின் கண்களையும் திரும்பி பார்க்கவைத்த ஒன்று. 2006 ம் ஆண்டிய வெளியான இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்க கிரேஸி மோகன் வசனம் எழுத ரஹ்மான் இசையமைத்தது படத்திற்கு கூடுதலான சிறப்பு. 150 நாட்கள் ஓடிய படம் என்பது பெருமைக்குரிய விஷயமாக இருந்தது.
அடிக்கடி டிவி சானல்களில் திரையிடப்படும் படமாகவும் வரலாறு படம் இருந்தது. இப்படம் தற்போது 14 ம் ஆண்டை எட்டியுள்ளது. இதனை ரசிகர்கள் #14இயர்ஸ்ஆப்வரலாறு என டேக் மூலம் கொண்டாடி வருகிறார்கள். ரூ 35 கோடிகளை தாண்டி வசூல் செய்ததுடன் அந்த ஆண்டில் சிறப்பான கலெக்ஷன் செய்த படம் எனவும் கொண்டாடப்பட்டது. பிளாக் பஸ்டர் ஹிட் லிஸ்டிலும் இடம்பிடித்தது.