நடிகர் அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் படத்தில் காமெடி நடிகர்கள் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு டி.இசையமைக்கிறார். படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரித்து வருகிறார். டி.இமானுக்கு அஜித்துடன் இணையும் முதல் படம்.
‘விஸ்வாசம்’ படம் மதுரை மற்றும் தேனி மாவட்ட பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி மற்றும் ராஜமுந்திரியில் செட் போட்டு நடைபெற்றது. தற்போது மும்பையில் பாடல் காட்சியைப் படமாக்கி வருகின்றனர்.
‘விஸ்வாசம்’ படத்தை அடுத்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’ பட இயக்குனர் எச். வினோத்துன் இணையவுள்ளார் அஜித். இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.
இந்தப் படம் இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘பிங்க்’ படத்தின் ரீமேக்காகும். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இவர் ஏற்கெனவே அஜித்தின் ‘பில்லா’, ‘மங்காத்தா’ மற்றும் ‘ஆரம்பம்’ படங்களுக்கு இசையமைத்துள்ளார்.