தலைவா படத்தில் நடித்த இவரை உங்களுக்கு தெரியுமா..? இவர் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா..? புகைப்படம் இதோ

சாம் ஆண்டர்சன் இவரின் இயற்பெயர் ஆண்டர்சன் சாமுவேல் சினிமாவிற்காக தான் சாம் ஆண்டர்சன் என மாற்றிகொண்டாராம். 2007ல் வெளிவந்த யாருக்கு யாரோ என்னும் தமிழ்த் திரைப்படத்தில் நாயகனாக நடித்தவரும் இப்படத்தில் இவரின் நடனம் மற்றும் நடிப்பிற்காக இணையத்திலும், குறிப்பாக யூடியூப் முதலிய சமூக வலைத் தளங்களிலும் புகழ் பெற்றவரும் ஆவார். இவர் ஈரோட்டில் பிறந்தவர்.

அங்கு இவர் ஐந்து ஊழியர்களைக் கொண்ட ஒரு கூரியர் நிறுவனம் நடத்தி வந்தார்.2001ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்னும் தமிழ்த் திரைப்படத்தினால் தூண்டப்பட்டு திரை உலகிற்கு வந்ததாக கூறியுள்ளார். இவரின் முதல் திரைப்படமான யாருக்கு யாரோ என்னும் திரைப்படம், இவரின் மாமாவால் தயாரிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் நான்கு திரையரங்குகளில் 25 நாட்கள் ஓடியது.

இவர் திரை உலகில் நுழையும் போது தனது பெயரை சாம் ஆண்டர்சன் என மாற்றிக்கொண்டார்.இந்த திரை பயணத்தை பற்றி அவர் கூறுகையில்,
நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஈரோடு. என் வீட்டுல நான்தான் மூத்த பையன். எனக்குப் பிறகு ஒரு தம்பி இருக்கான். அம்மா, அப்பா ரெண்டுபேரும் வேலை பார்க்குறாங்க. ஸ்கூல் படிச்சு முடிச்சதும், காலேஜ்ல இன்ஜினீயரிங் படிக்கணும்னு ஆசைப்பட்டு படிச்சேன், மெக்கானிகல் இன்ஜினீயரா வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன்.

அப்போ, சொந்தமா ஏதாவது பிசினஸ் பண்ணலாம்னு தோணுச்சு. ஏற்கெனவே கொரியர் கம்பெனியில வேலை பார்த்த அனுபவம் இருந்ததுனால, சொந்தமா கொரியர் கம்பெனி ஆரம்பிச்சேன்.எங்க தாத்தாவுக்கு, ‘பேரன் சினிமாவுல நடிக்கணும்’னு ரொம்ப ஆசை. எனக்கு அப்படி எதுவும் தோணுனதில்லை. தவிர, வீட்டுல பெரியப்பா ஒருத்தரும் சினிமாமேல ரொம்பக் காதலோட இருப்பார். கொஞ்சம் பணம் சேர்ந்தாலே, இதைவெச்சுப் படம் தயாரிப்போமானு நினைப்பார்.

நல்ல தயாரிப்பாளரா சினிமாவுல வலம் வரணும்னு அவருக்கு ஆசை. நான் எப்போவும்போல கொரியர் பிசினஸை மட்டும் பார்த்துக்கிட்டு இருந்தேன்.
விஜயுடன் தலைவா படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவர் பேசியது” எனக்கும் விஜய் சாருக்குமான காட்சிகளை ஆஸ்திரேலியாவுல ஷூட் பண்ணாங்க.அந்த சீன் எடுக்கும்போது, காலையில எட்டு மணிக்கு சிட்னியில இறங்கினேன். அங்கே, ஒரு இடத்துல ‘தலைவா’ ஷூட்டிங் போய்க்கிட்டு இருந்துச்சு.

விஜய் சாரைப் பார்த்துட்டு, என்னால ‘இது நிஜம்தானா’னு நம்பவே முடியலை. சேர்ல ஒரு ஓரமா உட்கார்ந்து, விஜய் சார் நடிக்கிறதைப் பார்த்துக்கிட்டே இருந்தேன். ஏ.எல்.விஜய் சார் என்கிட்ட வந்து பேசினார். அப்புறம் விஜய் சாரும் எனக்குக் கை கொடுத்துப் பேசினார். என மகிழ்ச்சியுடன் கூறி அவருடைய அதே கொரியர் பிஸ்னஸ் தான் இப்போதும் பார்த்து கொண்டிருக்கிறார், சீக்கிரமே எல்லோரும் ஆச்சர்யப்படும் அளவிற்கு ஒரு ரீ என்ட்ரி சினிமாவில் கொடுப்பேன் என நம்பிக்கையுடன் சொல்லி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.