சமீபத்தில் பாலிவுட்டின் பிரபல இளம் நடிகர் சுஷாந்த் சிங் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து தற்போது கன்னடத்தில் பிக்பாஸில் கலந்து கொண்ட நடிகை ஜெயஸ்ரீ ராமையா சமீபத்தில் முகநூல் மூலம் ரசிகர்கள் இடையே உரையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது தனிப்பட்ட பிரச்சினைகள் இருப்பதாக அவர் கூறினார். அதன் பின்பு மன அழுத்தத்திலிருந்து என்னால் மீண்டு வர முடியவில்லை, இதனால் இந்த உலகிற்கும் மன அழுத்தத்திற்கும் குட்பை சொல்லி விலகிக் கொள்கிறேன் எனக் கூறி வீடியோவை முடித்தார். இதனை தொடர்ந்து ஜெயஸ்ரீ ராமையா தனது வீட்டிலேயே தற்கொலைக்கு முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியாகின. அதன் பின்னர் சில நிமிடங்களில் லைவ் வீடியோ வை நீக்கி விட்டார்.
அதன்பின் மற்றொரு பதிவில் மிக்க நன்றி சுதீப் சார் உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் என்னை காப்பாற்றியதற்காக நன்றி உங்களைப் பீதிக்குள்ளாக்கியதற்கும் நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவின் மூலம் நடிகர் சுதீப் விரைந்து அவரை காப்பாற்றி உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த பதிவு மிகவும் வைரலாகி வருகிறது. நடிகர் சுதீப் தமிழில் பல திரைப் படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும், கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.